எல்லாம் நீ
ஸ்ரீ சத் குரு திருவடி துணை
மனநலனும் ஆத்ம சுகமும் பெறுவீர்களாக
ரிபு கீதை
(ஸ்வய ஞானனுபவம்)
.....................................................................
காணும் அனைத்துமே பிரும்மம்;
நாமனைத்தும் அதன் ஸ்வரூபமே
பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி சந்நிதியில் தினசரி பராயணமாக ரிபுகீதைநிகழ்ந்துள்ளது.
பல சமயங்களில் பகவான் மிகவும் சிலாகித்து ரிபுகீதையின் பாராயணப் பயனைக் கூறியுள்ளார்கள்.
அதனைக் கேட்டு பசு லட்சுமி நிர்விகல்ப சமாதியில் இருந்ததை பகவான் அன்பர்களுக்கு
சுட்டிக்காட்டியுள்ளார்.
நினைவு எதுவோ அதுதானே ஜீவன் ஆகும்
நினைவு எதுவோ அதுதானே ஈசன் ஆகும்
நினைவு எதுவோ அதுதானே ஜகமும் ஆகும்
நினைவு எதுவோ அதுதானே மனதும் ஆகும்
நினைவு எதுவோ அதுதானே காமம் ஆகும்
நினைவு எதுவோ அதுதானே கருமமும் ஆகும்
நினைவு எதுவோ அதுதானே துக்கம் ஆகும்
நினைவு எதுவோ அதுதானே அனைத்தும் ஆகும்.
நினைவு இன்றி நிற்பதுவே அகண்டமாகும்
நினைவு இன்றி நிற்பதுவே நிட்டை ஆகும்
நினைவு இன்றி நிற்பதுவே ஞானம் ஆகும்
நினைவு இன்றி நிற்பதுவே மோட்சம் ஆகும்
நினைவு இன்றி நிற்பதுவே சஹஜம் ஆகும்
நினைவு இன்றி நிற்பதுவே பிரமம் ஆகும்
நினைவு இன்றி நிற்பதுவே சிவமும் ஆகும்
நினைவு அணுவுமில்லை எலாம் பிரமம் தானே.

No comments:
Post a Comment